உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை!
Monday, June 5th, 2023
நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றது.
2024ஆம் ஆண்டுக்கு செல்லும் போது இதனை விடவும் அதிகளவில் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக நாம் கடப்பாடுகளை கொண்டிருக்கவேண்டும் இவ்வாறான சூழலில் எதிர்காலத்தில் உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாகவும்’ இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை - பெட்ரோலிய...
“நட்பின் சிறகுகள்” தொனிப்பொருளுடன் வான்படையினரின் “வான் சாகசம் - 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். ம...
|
|
|


