உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!
Monday, July 10th, 2023
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. தரவொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையின் இடம் இந்த தரவுகளின்படி இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக நேபாளம் உள்ள நிலையில் அங்கு ஆண்டு தோறும் 35 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25ஆக காணப்படுகிறது.
அதிக பொதுவிடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகள் என அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கைக்கு கூடுதலாக, பங்களாதேஷ் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.
பங்களாதேஷில் ஆண்டுதோறும் 22 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரியவருகிறது.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் 10 – 13 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெக்சிக்கோ 8 பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்த பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


