உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமும் இணைவு!!
Saturday, February 25th, 2017உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமானது, தரமுயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர்– 2(Alphaliner-2)தரப்படுத்தலுக்கமைவாகவே துறைமுகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இத்தரப்படுத்தலுக்கு அமைய 2016ஆம் ஆண்டு உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் 23ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. 2015ஆம் ஆண்டு, கொழும்புத்துறைமுகமானது 26ஆம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது.
கொழும்புத்துறைமுகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சிறந்த சூழலை உருவாக்கியமையே இவ்வெற்றியின் இரகசியமென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களை, சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
பரீட்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானம் - கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு!
தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் - ஊடகத்துறை அமைச்ச...
வடக்கின் அபிவிருத்திகளுக்கு சில இனவாத தமிழ் தலைவர்களே தடையாக உள்ளனர் - ஒத்துழைப்பு வழங்காது எல்லாவற...
|
|