உலகிற்கு ஏற்ற வகையில் புதிதாக பாடத்துறை அறிமுகம் – கல்வி அமைச்சர்!

Saturday, July 20th, 2019

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து மாணவர்களும் 13 வருடங்கள் கட்டாய கல்வி கற்றல் வேண்டும் என்ற தேசிய வேலைத்திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வியின் கீழ் உயர் தரத்தில் தொழிற்கல்வியை ஒரு பாடமாக தெரிவு செய்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற மனித வளத்தை பாடசாலையில் இருந்து உருவாக்கும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் பாடத்துறையின் கீழ் 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வியை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான 26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: