உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Friday, October 27th, 2023
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார மாற்றம் தொடர்பான திட்டத்தை எதிர்வரும் பாதீட்டு திட்ட உரையில் நாட்டிற்கு முன்வைக்கவுள்ளதாகவும் அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!
இடர் அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தயார் - தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையம்!
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...
|
|
|


