உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் ஷம்மி சில்வா தலைமையிலான குழுவே கோரியது – வெளியானது அதிர்ச்சி தகவல்!
 Saturday, November 11th, 2023
        
                    Saturday, November 11th, 2023
            
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் (ஐசிசி) ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை (10) கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் பிரதிநிதிகளை பார்வையாளராக பங்கேற்க ஐசிசி அனுமதித்துள்ளதால், அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி கூட்டங்களில் ஷம்மி சில்வா பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தற்போது இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக ஐ.சி.சி.யால் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக, இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தல் தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடு இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        