உறுப்பினர்களுக்கான கடிதம் அவசரமாக அனுப்பிவைப்பு – உள்ளுராட்சித் திணைக்களம் துரித நடவடிக்கை!

உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு முதலாவது சபை அமர்வுகளுக்குரிய கடிதங்கள் வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .
உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டட உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய அரசிதழ் 9 ஆம் திகதியிடப்பட்டே வெளியிடப்படவுள்ளது . இதனால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கடிதத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டிய நிலமை உள்ளுராட்சித் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது .
உறுப்பினர்களுக்கு இன்றைய தினம் கடிதம் கிடைப்பதற்கு ஏதுவாக நேற்று இரவிரவாக கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் உள்ளுராட்சித் திணைக்களம் ஈடுபட்டது .வடக்கில் தொங்கு நிலையிலுள்ள 30 சபைகளின் முதலாவது அமர்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலமையிலே நடைபெற வேண்டும் இந்தச் சபைகளுக்குரிய உறுப்பினர்களுக்கே நேற்றைய தினம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|