உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Tuesday, February 13th, 2024
ஐந்து வருட காலமாக செலுத்தமுடியாதுபோன உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கு உர வகைகளை கடனுக்கு பெற்றுள்ள நிலையில் விவசாய அமைச்சு, தனியார் துறையினருக்கு 23,000 மில்லியன் ரூபாவை செலுத்தவேண்டியிருந்தது. அதில் 93% தற்போது செலுத்தப்பட்டுவிட்டதாகவும், தற்போது 5,000 மில்லியன் ரூபாவே நிலுவையாகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீதமான அந்த தொகையை வழங்குவதற்கு நிலவும் சட்ட ரீதியான சிக்கல்களை நிறைவுசெய்து விரைவாக அதனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
ஏப்ரல் 21 கொடூரத் தாக்குதல் - மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம்...
மிகப்பெரிய கொள்ளளவுடைய பாரம் தூக்கி இலங்கையில் - 42 பாரவூர்தியில் உதிரிபாகங்கள் இடமாற்றம்!
|
|
|


