உர மானியம் வழங்குவதற்காக 1500 மில்லியன் – அரசாங்கம்!

Saturday, March 18th, 2017

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை போன்ற பெருந்தோட்ட செய்கைக்கான உர மானியமாக 1500 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் வேண்டுகோள் படி 2017ம் ஆண்டுக்காக இந்த உர மானியம் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி உர மானியம் வழங்குவதற்காக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபைக்கு 900 மில்லியன், தென்னை செய்கைக்காக 500 மில்லியன் மற்றும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்காக உச்சபட்சமாக ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பிற்கு 15,000 ரூபா ஒதுக்கி உர மானியம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் தென்னை செய்கைக்காக உச்சபட்சமான 5 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 9000 ரூபா படி உர மானியம் பெற்றுக் கொள்ள முடியும்.

இறப்பர் செய்கைக்காக 02 ஹெக்டயர் நிலப்பரப்பிற்கு உச்சபட்சமாக 5000 ரூபா படி உர மானியத்திற்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உர மானியங்களை வருகின்ற ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தொட்ட உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு கூறியுள்ளது

Related posts:


அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் ...
முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ர...
மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் - இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்...