உரும்பிராயில் வழிப்பறியில் ஈடுபட்டவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!

உரும்பிராய் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் அறுத்ததாகவும் குறித்த பெண் கூக்குரல் எழுப்ப வீதியால் வந்தவர்களால் ஒருவர் பிடிக்கப்பட மற்றவர் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !
இலங்கை மத்திய வங்கிக்கு பிரதி ஆளுநர்கள் இருவர் நியமனம்!
கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை - ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!
|
|