உரிய சந்தை வாய்ப்பு இதுவரை இல்லை – கற்றாழைச் செய்கையாளர்கள் கவலை!

கற்றாழைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு வருடம் கழித்தும் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை உரிய அதிகாரிகள் இதுவரை பெற்றுத்தரவில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பயிர்ச் செய்கை யாழ். மாவட்டத்தில் வேலணைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சரவணை, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் 36 ஆயிரம் கற்றாழைகளும் நெடுந்தீவு மேற்குப் பகுதிகளில் 25 ஆயிரம் கற்றாழைகளும் பயிரிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இப்பயிர்ச் செய்கை தொடர்பில் நெடுந்தீவு மேற்கு விவசாயிகள் தெரிவிக்கும் போது –
தமது பிரதேசத்தில் கற்றாழை பயிரிடப்படுவதற்குரிய சிறந்த மண் வளம் காணப்படாது விடினும் பிரதேச செயலகத்தின் உதவியுடன் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டதாகவும் இந்நிதியில் தேவையான மண், வேலி அடைப்பு என்பவற்றை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.
தமது பிரதேச்தில் பயிரிடப்பட்ட கற்றாழைச் செய்கையை உரிய காலத்தில் அறுவடை செய்து சந்தைப்படுத்துவதற்குரிய வழிமுறைகள் எதுவுமின்றி தாம் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலணைப் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கும்போது கற்றாழை பயிரிடுவதற்குரிய சிறந்த மண் வளத்தைத் தமது பிரதேசம் கொண்டிருந்தும் தமக்கான சந்தை வாய்ப்புக் கிடைக்கவில்லையெனத் தெரிவித்தனர்.
எனவே தமக்கான உள்ளுர், வெளியூர் சந்தை வாய்ப்பினைப் பெற்றுத்தரும் சந்தர்ப்பத்தில் தாம் அதிகளவிலான செய்கையில் ஈடுபட முடியுமெனவும் இதற்குரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கற்றாழைச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|