உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

Thursday, April 26th, 2018

போலியாக உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்தள்ளது.

1500 ரூபாவிற்கு அதிகமான விலையில், உரத்தை விநியோகிப்பவர்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதி முறைகளை மீறி உர விநியோகம் இடம்பெறுமாயின், அது தொடர்பில் 1920 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 303 66 66 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.

அரச உர கூட்டுத்தாபனத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா உர கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா கொமர்ஷர் உர நிறுவனம் என்பவற்றின் விநியோகஸ்தர்கள் ஊடாக 1500 ரூபா என்ற சலுகை விலையில் உரத்தினை பெற்று கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: