உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Thursday, November 17th, 2022
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
ஆனால் அமைச்சரவையின் ஒற்றுமை உடைந்து விடும் என்பதால் தான் இது வரை அதை பகிரங்கமாக கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேயிலை தொழில் பிரச்சினைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேயிலை பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே 3,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரமேஷ் பத்திரன, உரங்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் இந்த உரத்தடையை முதலில் எதிர்த்தவர் தாம் என்றும் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


