2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்!

Saturday, November 13th, 2021

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது வரவு செலவுத் திட்டமாக இது அமைந்திருந்தது.  

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பதுடன், இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்.

குறித்த பாதீட்டில் அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பல விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதுவரை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்குவதற்காக நிதி அமைச்சரால் வெளியிடப்படும் வாரன்ட் அனுமதிப்பத்திரம் அடுத்த வருடம் முதல் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படவுள்ளது.

எதிர்பார்த்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ள அரச தொழில் முயற்சிகளுக்கு புத்துயிரளிப்பதற்கான திட்டம்

அரச அலுவலகங்களில் புதிதாக கட்டிடங்களை அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு அனுமதியில்லை

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் 5 லிட்டரால் குறைக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலங்களில் தொலைபேசி செலவு 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரத்திற்கான செலவு 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கான 5 வருட சேவைக்காலம் 10 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செயற்திறன் தத்துவத்தின் அடிப்படையில் மதிப்பீட்டு முறையில் பொது சேவை அறிமுகம்

அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டம் கிராமிய அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்படவுள்ளதுடன், பயனாளிகள் தொடர்பில் விஞ்ஞான மீளாய்வு மேற்கொள்ளப்படும்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள விசேட வர்த்தகப் பொருள் வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அறிவிடப்படும்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஆயுள் மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதியை ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வசதிகள் மற்றும் இணையத்தள வசதிகளை விஸ்தரித்து அனைத்து பாடசாலைகளுக்கும் அதிவேக இணைய வசதி பெற்றுக்கொடுக்கப்படும்

முச்சக்கர வண்டி சேவையை ஒழுங்குபடுத்த அதிகார சபை ஸ்தாபிக்கப்படும்

எந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் கிடைக்காத சிரேஷ்ட பிரஜைகளுக்காக பங்களிப்பு ஓய்வுத் திட்டம்

2022 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்படும் வியாபாரங்களுக்கு பதிவுக்கட்டணம் அவசியம் இல்லை.

பயிரிடப்படாத நிலங்களை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குவற்கும் அரச காணிகளை கையாள்வது தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரவும் முன்மொழியப்பட்டுள்ளது

வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க தற்போதுள்ள சட்டங்களில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானம்

ரயில்வே திணைக்களத்திற்கு உரித்தான காணிகளை கலப்பு அபிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த தீர்மானம்

அனைத்து நிர்மாணப் பணிகளுக்கும் கட்டாயம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்

பலதுறைகளுக்கு அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது

மாற்று கிருமிநாசினிகளை பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்

திரவ உரம் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

மீன்பிடி மற்றும் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன

குடிநீர், வீதி அபிவிருத்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்திக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு

நகர மற்றும் கிராமிய வீடமைப்பு திட்டங்களுக்காகவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

பெருந்தோட்டங்களில் காணப்படும் தொடர் குடியிருப்புகளை மூன்று வருடங்களில் நீக்கி புதிய குடியிருப்புகளை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

COVID வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது

COVID நிலைமையினால் தொழிலை இழந்த வேன் சாரதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபாவும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக 700 மில்லியன் ரூபாவும் தனியார் பஸ் ஊழியர்களுக்காக 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது

1000 தேசிய பாடசாலை அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

நீதிமன்ற கட்டமைப்பில் வழக்கு விசாரணைகளின் போது இடம்பெறும் தாமதத்தை குறைப்பதற்காக டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் பெண் வியாபாரிகளை ஊக்குவிக்க, HOME Shop என்ற பெயரில் சிறிய வர்த்தக நிலையத்தை ஆரம்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்த மேலும் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

தற்போது அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நியமனங்கள் வழங்கப்படவுள்ளன

அரசியல் பழிவாங்கல்களுக்குட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அரசாங்கம் 2,284 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றது.

அரசாங்கத்தின் மொத்த செலவு 3912 பில்லியன் ரூபாவாகவும்.

அதன் பிரகாரம், துண்டு விழும் தொகை 1628 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது.

எனினும், அடுத்த வருடம் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் உள்ளிட்ட கொடுப்பனவுகளின் மொத்த பெறுமதி 5245 பில்லியன் ரூபாவாகும்.

அரச கணக்குகளின் படி, அடுத்த வருடத்திற்குள் அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் 3200 பில்லியன் ரூபாவாகும்

000

Related posts: