உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம்!
Saturday, September 9th, 2023
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு
வடக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தே முன்னெடுத்து வருகின்...
தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது - கலந்து கொள்ளாதது எனது தவறு ...
|
|
|


