உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
Wednesday, April 13th, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிநிலைநாட்டுவது குறித்து எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது உரிய விசாரணைகள் மூலம் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி தனது உயிர்த்தஞாயிறு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலிலின் துயரமான அனுபவங்கள் இன்றும் எங்கள் மனதில் எதிரொலித்தவண்ணம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஏ-9 வீதியில் கடும் பனி மூட்டம்!
எரிபொருளை அடுத்து பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்!
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் - இரானுவத் தளபதி !
|
|
|


