உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் ஆரம்பம்!
Saturday, August 12th, 2017
கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்று கட்டங்களாக இந்த திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் , முதல் கட்ட திருத்தப்பணிகள் எதிர்வரும் மாதம் 7ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் செப்டம்பர் மாதம் 13ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையும் ,மூன்றாம் கட்ட திருத்தப்பணிகள் மற்றும் பொதுவான சோதனை 30ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.முதல் கட்ட திருத்தப்பணிகள் நாடு பூராகவும் 31 மதிப்பீடு மையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் - குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க ...
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு - தொழ...
ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் - கல்வி அமைச்சு தீர்...
|
|
|


