உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பின்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம் – தேசிய சமாதான பேரவை!
Thursday, April 25th, 2019
அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பு இன்மை குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைவதாக தேசிய சமாதான பேரவை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 350க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் காயமடைந்தனர். இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும், சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கின்ற விடயமாகும். அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மத்தியில் ஒத்துழைப்பு இன்மையை காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தேச நலன் கருதி, கண்கூடாக ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” என தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related posts:
நோர்வே பிரதமர் இலங்கைக்கு திடீர் விஜயம்!
எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு - பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு !
|
|
|


