உயர்நீதிமன்றின் தீர்ப்பு நாளை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கையளிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு நாளை வழங்கவுள்ளது.
மேலும், இதை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 20ஆவது அரசியலமைப்புக்கு எதிராக 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணைய வழி குற்றங்களை தடுக்க விசேட பிரிவு!
தரமான மருத்துவ சிகிச்சை : முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!
மகியங்கனையில் திடீர் தீவிபத்து!
|
|