உயர்தர வகுப்பு மாணவர்கள் கொரிய மொழியையும் தேர்வு செய்யலாம் – கொரிய தூதுவர் தெரிவிப்பு!
Tuesday, May 11th, 2021
இந்த ஆண்டுமுதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழியாக கொரிய மொழியை தேர்வு செய்ய முடியும் என கொரிய தூதுவர் சந்துஷ் சுன்ஜின் ஜியோன்கி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுமுதல் உயர்தரத்தில் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைவோர் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரிய மொழியைக் கற்பதன்மூலம், கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரிய மொழியை உயர்தர வகுப்புக்களில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவாதம் இல்லாத இலங்கையினை எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும்:யாழில் ரணில் விக்கிரமசிங்க!
முரளிப்பழ மரங்களை வெட்டிய பலர் படையினரால் கைது!
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
|
|
|


