உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரிக்கை!

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வருடாவருடம் நடாத்துகின்ற மதிப்பீட்டுப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கணித, உயிரியல் பிரிவின் மாணவர்களுக்கான மதிப்பீட்டுப் பரீட்சையாக இது இருக்கும் என்பதுடன் வடமாகாண மாணவர்களுக்கான ஒரு பயிற்சிப் பரீட்சையாகவும் இது அமைகின்றது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு இந்தப் பரீட்சைகள் உதவும் என்பதால் வட மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதை அந்தந்தப் பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யுமாறு வெளிக்கள நிலைய இணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது!
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – 83 இராஜதந்...
|
|