உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சு!
Tuesday, March 31st, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அந்த அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தோடு இவ்வாறான போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான செய்திகளை மாத்திரமே நம்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
|
|
|


