உயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு பயிற்சி செயற்திட்ட உதவியாளர் நியமனம் – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, March 21st, 2019

க.பொ.த உயர்தரம் வரை கல்விகற்ற 7,500 பேருக்க பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வருமாறு,

அபிவிருத்தித்திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித்திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியவசிய பணிகளாகவுள்ளன.

இதற்காக க.பொ.த உயர்தரப்பரீட்சை வரையில் கல்விகற்ற தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒருவருட காலத்திற்கு பயிற்சித்திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்க ரூபா 15,000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் பிரதமர் மற்றும் தேசிய பொருளாதார அலுவல்கள் மற்றும் மீள் குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: