உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகம்!
Tuesday, January 1st, 2019
2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று(01) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இந்த சான்றிதழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வியைத் தொடர்வதற்காக சமர்ப்பிக்கும் வகையில் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனைசாதாரண சேவை மூலம் அல்லது ஒருநாள் சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் ஒருநாள் சேவை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன் மேலதிக பிரதி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !
யாழ்ப்பாணத்தில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடி – எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்திய...
|
|
|


