உயர்தரத்திலான யூரோ-4 எரிபொருள் அறிமுகம்!
Friday, June 15th, 2018
தற்போது விற்பனை செய்யப்படும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலுக்கு பதிலாக உயர்தரத்திலான யூரோ-4 என்ற எரிபொருள் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யூரோ ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த யூரோ-4 எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் விலை அதிகரிக்காது என்று அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
80 வீதமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை - ஊர்காவற்துறை பொலிஸார்!
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மூன்று தள கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!
தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது - 1 ஆம் திகதிமுதல் பால்மா சந்தைக்கு வரும் என மி...
|
|
|


