மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது – உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவும் தயங்கமாட்டோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021

நாடாளுமன்ற சட்டங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை பறிக்க முடியும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

அந்த குற்;றங்களில் அவர்கள் மீண்டும் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவசியம் என்றால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நல்லாட்சி அரசாங்கம் தேசியபாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் தடுக்கத் தவறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் புலனாய்வுசேவையை அழித்தனர் யுத்தவீரர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இராணுவத்தினரின் மனோநிலையை சிதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் யார் காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றன, ஜனாதிபதிமுதல் பிரதமர் வரை முழு அமைச்சரவையும் காரணம் என அந்த ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை இரத்துசெய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் ஒன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது குறித்து அவதானமாகயிருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: