உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
Thursday, April 11th, 2019
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் 120 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல மின்னுற்பத்தித் திட்டங்கள் அமுலாக உள்ளதுடன், இதன் மூலம் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டத்தின் மூலம் இரு போகங்களிலும் 6 ஆயிரம் ஹெக்டயர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளலாம் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாடுகளின் பூகோள அரசியல் தேவைக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை - ஜனாதிபத...
இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு - இந...
27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் - நீதியமைச்சர் விஜயத...
|
|
|


