உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிப்பு!

அரசியல்யாப்பு பேரவை இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதன்போது அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் சம்பந்தமான உப குழு, நீதித்துறை சம்பந்தமான மீது உபகுழு, நிதி சம்பந்தமான உபகுழு, பொது பாதுகாப்பு பொலிஸ் மற்றும் சட்ட அமலாக்க உபகுழு, பொது சேவை மறுசீரமைப்பு உபகுழு மத்திய அரசு மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தொடர்பு சம்பந்தமான உப குழு ஆகிய 06 உப குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த ஆறு உப குழுக்களுக்கும் ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடி. - பு...
ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் என்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையா...
கொரோனாவை மக்கள் மறந்தவிட்டனர் – எச்சரிக்கை அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி!
|
|