உண்மையைக் கண்டறிதல் மீளிணக்க பொறிமுறையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, January 18th, 2023
உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்க பொறிமுறை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யுத்தத்தின் பின்னர் சமாதானத்தை பாதுகாப்பதற்காக அர்த்தமுள்ள வழிமுறையாக உண்மையைக் கண்டறியும் சுயாதீனமான, உள்ளூர் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் மீளிணைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சில ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் , கல்வி அமைச்சர், நீதி அமைச்சர் ,வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


