உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து கைதிகள் விலகல்!

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளில் ஒருபகுதியினர் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 கைதிகள் இன்று காலை தொடக்கம் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் காரணமாக தற்போதைக்கு பதினெட்டுப் பேர் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
ஏனைய கைதிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
Related posts:
புகையிரதம் மோதி இளைஞர் பலி!
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!
|
|