உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக – இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை கடனாக கோரவுள்ளது இலங்கை !

உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 1 பில்லியன் டொலருக்கான தற்காலிக கடன் வசதியை இலங்கை கோரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை தமது பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளிடமிருந்து நிதியுதவியை ஊக்குவிப்பதற்கும் கடந்த வாரம் 3 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்தது. இதன் முதல் தவணையாக 330 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றது.
இந்தநிலையில் புதிய கடன் வசதி குறித்து இலங்கை கலந்துரையாடவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் - கர்தினால்!
இன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடல்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி - மத்...
|
|