உணவு உட்கொள்வதை 30 சதவீதமான குடும்பங்கள் குறைத்துள்ளனர் – இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்!
Thursday, June 25th, 2020
இலங்கையில் 30 சதவீதமான குடும்பங்கள் உணவு உட்கொள்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளை மையப்படுத்தி கடந்த மே மாதம் அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உணவினை குறைத்துக் கொண்ட குடும்பங்களில், 80 சதவீதமானவர்கள், இறைச்சி, மீன், முட்டை, பால் உற்பத்தி ஆகிய புரத சத்துள்ள உணவுகளை தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், அவர்களில் 54 சதவீதமானவர்கள், மரக்கறி மற்றும் பழங்களை தவிர்த்துள்ளனர். அதேபோன்று, 30 சதவீதமான சிறுவர்கள் எந்தவகையான இரும்புச் சத்து உணவுகளையும் உட்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்கள், நாட்டு மக்கள் வறுமை நிலைக்குள் தள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் ஜேன் கௌ (Jean Gough) தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


