உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் ஜனாதிபதியின் கரங்களுக்குச் சென்றது!

Friday, September 9th, 2016

உடவில் மகளிர் கல்லூரியின் அதிபரது பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து  அவரது பதவியை நீடிக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விஜயம் செய்திருந்த  ஜனாதிபதியை  யாழ். சுப்ரமணியம் பூங்காவில் வைத்து உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

உடுவில் மகளிர் கல்லூரி அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டுமென பாடசாலையின் மாணவிகள் மற்றும் பெற்றோர் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் பாடசாலைக்கு வந்துள்ளார். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் புதிய அதிபருக்கு ஆதரவான சிலரினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

nh

Related posts: