உடலில் அதிகமான வெப்பநிலை காணப்பட்டால் அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் – நாட்டு மக்களுக்கு பிரதி பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

Friday, April 24th, 2020

ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.

நாட்டில் குறிப்பிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் சுகாதார ஆலோசனைகளுக்கமைய  ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். அத்துடன் பொதுப்போக்குவரத்து சேவை வழங்குனர்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்களுக்கமைய செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள்ள அவர் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்ற வேண்டாம் எனவும் பணித்துள்ளதுடன்  பயணிகள் பேருந்தில் ஏறிய பின்னர் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என்றால் அடுத்த பேருந்திற்கு காத்திருந்து செல்லுமாறும் மக்களிடம் கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களை ஈடுபடுத்தி சேவைகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டிய அவர் உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் பொலிஸாரிடம் அல்லது சுகாதார அதிகாரிகள் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எவராவது சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 368 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 38 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: