உடன் பதவி நீக்குங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
Friday, May 4th, 2018
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகள் இருவரை உடன் பதவி நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ள திட்டம் ஒன்றுக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குறித்த இரு முக்கிய உயர் அதிகாரிகளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை - நாடாளுமன்ற தெரிவுக்குழு!
தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம்!
இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!
|
|
|
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை - ஆளுநர் ஜீவன் தியாகரா...
இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் - இலங்கை சுற்...
எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நலன்புரி நன்...


