உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Tuesday, December 21st, 2021

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 210 ரூபாவாக அதிகரித்துள்ளது.

புதிய விலை உயர்வால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: