ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் – உன்னிச்சை மக்களிடத்தில் தோழர் ஸ்டாலின்

Monday, May 29th, 2017
போலித் தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி கிழக்கு மாகாணத்தில் காலங்காலமாக வாக்குகளை அபகரித்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கு கடந்த நான்கு தசாப்தங்களாகக் கிடைத்த நன்மைகள் எவையுமில்லை. இந்த ஏமாற்றங்களிலிருந்து எமது மக்கள் விழிப்படைய வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உன்னிச்சை, கற்சேனை, பன்சேனை, பாவற்கொடிச் சேனை, கரவெட்டியாறு ஆகிய கிராமங்களின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளிடத்தில் உரையாற்றிய போதே தோழர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் உரையாற்றிபோது,
தமிழ்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் தலைமைகள் எனச் சொல்லிக்கொள்பவர்களும், போலித் தமிழ்த் தேசியம் பேசியவர்களும் உங்களை நாடி வந்திருக்கின்றார்கள். பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இதுவரை இந்தக் கிராமத்தின் எழுச்சிக்காகவோ, பொருளாதார மேம்பாட்டுக்காகவோ எதையும் செய்ததில்லை.
எமது மக்களுக்கு அரிதாகக் கிடைக்கப்பெறுகின்ற பயனுள்ள திட்டங்களையும் கிடைக்கச் செய்யாமல் தடுப்பவர்களாகவே நீங்கள் வாக்களித்தவர்கள் செயற்படுகின்றார்கள். தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்கு கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புக்களை எமது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திடம் கல் வீட்டுத்திட்டத்தைத் தருவதற்கும், வீட்டுத் திட்டத்திற்கான கடன் உதவி தருவதற்கு பணமும் இல்லை. இந்த நிலையில் தகரக் கொட்டகைகளிலும், தரப்பால் மறைப்புக்களுடனும், வீடற்று தற்காலிக இடங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு, எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனி ஒருவராக இலகு வீட்டுத் திட்டத்தையாவது  பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகின்றார்.
அந்த வீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் தற்போதைய நெறுக்கடியான வாழ்விலிருந்து தமது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியும். இலகு வீட்டுத்திட்டம் வேண்டாம் என்று நிராகரிப்பதன் ஊடாக எமது மக்களுக்கு வீடுகள் கிடைப்பதற்கு அரசிடம் மாற்றுத்திட்டம் தற்போதைக்கு எதுவுமில்லை.
எமது மக்களின் நாளாந்த மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நடைமுறை யதார்த்தத்தின் அணுகுமுறையூடாகவே தீர்வைக்காண வேண்டும். அதன் ஊடாகவே எமது மக்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வை பொருளாதார ரீதியாக வளப்படுத்தவும் முடியும் என்பதே தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் ஜனநாயக வழிமுறைப்போராட்டமாகும். கடந்த காலம் பல கசப்பான அனுபவங்களை எம்மீது சுமத்திச் சென்றுவிட்டது. அதற்காக நாம் அழுது கொண்டிருக்க முடியாது. எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்ப நாம் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.

Related posts:


60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்...
3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது - நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்...