ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து!
Sunday, March 7th, 2021
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று கிட்டதட்ட இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில், இதுவரையில் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மருத்துவ பீட அனுமதிக்கு உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு கட்டாயம் – இலங்கை மருத்துவ சபை!
அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் இணையத்தில் - அமைச்சர் ஜனக பண்டார!
கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!
|
|
|


