வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிய திட்டம் அமுல்!

Monday, March 13th, 2017

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான புதிய வாகன ஒழுங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  எதிர்வரும் 18ஆம் திகதி வரை இராஜகிரிய சந்தியை அண்டியப் பகுதியில் இந்தத் திட்டம் ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் வெற்றியின் அடிப்படையில் நாடு பூராகவும் அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரை மற்றும் ஆயுர்வேத சந்தியிலிருந்து ராஜகிரிய சந்தி வரை இரு மருங்கு முன்னுரிமை போக்குவரத்து திட்டம் அமுலாகிறது. குறைந்த செலவில் கூடிய பிரயோக பயன்பாட்டு ரீதியில் நாட்டின் போக்குவரத்து சேவைகள் விருத்தி செய்யப்படவுள்ளன.

கொழும்பில் இருந்து பயணிக்கும் அனைத்து பஸ் வண்டிகளும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான பாதையில் ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளன.

கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டிகளில் பயணிப்பவர்களுக்கான இராஜகிரிய பஸ் தரிப்பிடம்இ ஸ்ரீ ஜயவர்தனபுர பாதையில் ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

176ஆம் மற்றும் 177ஆம் இலக்க பஸ் வண்டிகளுக்காக ஆயுர்வேத சந்தியில் ஸ்ரீஜயவர்தனபுர பிரதான பாதையில் உள்ள பாலத்திற்கு அருகில் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

170, 190. 177, 168. 153. 176,144. 186, 174, 175, 150, 171 ஆகிய இலக்கங்களைக் கொண்ட பஸ் வண்டிகள் இந்த புதிய வாகன ஒழுங்கிற்கு அமைய பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரியாலய  நேரங்களான காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையும் மற்றும் மாலை 4.30க்கும் கொழும்பு கோட்டையிலிருந்து பத்தரமுல்லை வரை சுமார் 150 தொடக்கம் 180 பஸ் வண்டிகள் பயணிப்பதாக  சமிபத்தஜல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Related posts: