கனடாவுக்கு சட்டவிரோத பயணம் – பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல்!

Thursday, November 17th, 2022

சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 306 பேர் இடைநடுவில் வியட்னாம் கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் மீட்கப்பட்டு தற்போது வியட்னாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு சென்றவர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டது.

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தகவவலறிந்து சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாக இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டு 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தாம் இலங்கைக்கு திரும்பிவரப்போவதில்லை என பிடிபட்ட இலங்கையர்கள் கூறிய நிலையில், இவ்வாறு சட்டவிரோதமாக பயணம் செய்தவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: