மாணவர்களின் உரிமைகளை அரசு முடக்குவதாக நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணிகுற்றச்சாட்டு!

Wednesday, September 7th, 2016

மாணவர்களின் உரிமைகளை அரசு முடக்குவதாக நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணிகுற்றச்சாட்டு!

இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை முடக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுரா குமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுரா குமார திசாநாயக்க அரசாங்கம் பலகலைக்கழக மாணவர்களின் போராட்டங்களை முடக்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

தற்போதையை ஆட்சியின் கீழ் 107 மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 57 மாணவர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.கடந்த தினங்களில் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய பேரணிகள் மீது போலீசார் ஏழு தடவை கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசாநாயக்க, பாதிக்கப்பட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் இப்பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ள முடியுமென்று மேலும் தெரிவித்தார்.

anura-dissanayake-415x260

Related posts: