ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் சாவகச்சேரியில் இரத்ததானம் முகாம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்திருந்தனர்.
இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான கட்சியின் அதரவாளர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி பூரண ஆதரவு!
கோர விபத்து - கொழும்பு-சிலாபம் வீதியில் 6 பேர் பலி!
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
|
|