இ.போ.ச.சேவை முடக்கம்: பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அவதி: பெற்றோர் கவலை!

பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவரின் கல்வி தொடர்பில் அக்கறையின்றி தமது சுயநலன்ளை முன்நிறுத்தி போராட்டம் நடத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடானது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாபடு என புத்திஜீவிகளாலும் பெற்றோராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளரை உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடைய தொழிற்சங்களின் வற்றுபுற்தலின் பெயரில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த போராட்டத்தை டிசெம்பர் 13 ஆம் திகதி நடத்தத்திட்டமிடப்பட்டிருந்ததாகவும், எனினும் அந்தக் காலப் பகுதியில் ஜி.சி.ஈ.சாதாரணதரப் பரீட்சை இடம்பெறவுள்ளதை காரணங்காட்டி. இன்றையதினம் நடைபெறுவதாகவும்
குறித்த ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்றையதினம் இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான மூன்றாம் தவனை பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதால் தூர இடங்டகளிலிருந்து பேருந்துளில் தமது பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு செல்வதற்காக காத்திருந்த மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களும் நோயாளர்களும் குறித்த சேவை பணிப்பகிஷ்கரிப்பால் பெருந் துன்பங்களுக்கு முகங்கொடுத்திருந்ததையும் காண முடிந்தது.
Related posts:
|
|