இ.போ.சவின் முக்கிய தகவல்!
Sunday, December 22nd, 2019
எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துச்சேவை முதலானவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில், 26ம் திகதி தொடக்கம் ஜனவரி 1ம் திகதி வரை இலங்கைபோக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேலதிக பஸ்சேவைகள் மேற்கொள்ளப்படும்.
விசேடமாக, கொழும்பிலிருந்து ஹட்டடன், யாழ்ப்பாணம், பதுளை, நுவரெலியா, வவுனியா வரையில் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும். கொழும்புகோட்டையில் இருந்து கண்டிக்கு இடையில் 23ம் திகதிவரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறும்.
பதுளை -கொழும்புக்கு இடையில், 24ம் 27ம் மற்றும் 29ம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள்இடம்பெறும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
|
|
|


