இ.போ.சபை பேருந்து தாக்குதலுடன் தனியார் பேருந்து நடத்துநர் தொடர்பு  – வவுனியா பொலிஸார் தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2016

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பெருந்து மீது நேற்றுமுன்தினம் வவுனியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தனியார் பஸ் நடத்துநர்கள் தொடர்புப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா பயணித்த இ.போ.ச பெருந்து மீது தாண்டிக்குளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பெருந்தில்   பயணித்த பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் பின்னரே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர். பிடிக்கப்பட்டவர் தனியார் பெருந்து  நடத்துநர் என்றும், தன்னுடன் இணைந்து தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை தெரிவித்தார் என்றும் – பொலிஸார் தெரிவித்தனர். ஏனையவர்களும் தனியார் பெருந்து  சேவையைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் – தாக்குதலுடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் – வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1476633460_download

Related posts:

மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலும் இனவாத மதக் குழுக்கள் இருப்பது துரதிஸ்டம் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் இலங்கையின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது - சமுத்திர ச...
மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை - அமைச்சர் நி...