இ.தொ.கா. கணபதி கனகராஜ், துரை மதியுகராஜாவிற்கு புதிய பதவி!

ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றி
மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!
இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெ...
|
|