இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் இலங்கை நாடுகிறது – அரப் நியூஸ் தெரிவிப்பு!

இலங்கை, தமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் நாடுவதாக, அரப் நியூஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு, சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் மூத்த அதிகாரிகள் உட்பட, ராஜ்யத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்துள்ளார்.
ஜெட்;டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்தபோது, உறுப்பு நாடுகளிடம் இருந்து மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவை, அமைச்சர் சப்ரி கோரியுள்ளார்.
1969 இல் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் பெரும்பான்மையான பௌத்த நாடாக இருந்தாலும்,இஸ்லாமிய உலகத்துடனான இலங்கையின் உறவுகள் நீண்ட காலமாக தொடர்வதாக அரப் நியூஸூக்கு அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|