இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைக் ஏற்பாடு – மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும உறுதி!
Monday, February 8th, 2021
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தவகையில் அனைத்தையும் செய்யவுள்ளதாகவும் தெதரரிவித்துதுள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, அதிலொரு கட்டமாகவே இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்க மின் மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


