இவ்வருடம் 13 ஆயிரத்து 157 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, February 19th, 2023

இந்த வருடம் 13 ஆயிரத்து 157 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு அபாயத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சமூக மருத்துவ நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளத...
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை - 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக...
சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்துமாற...