இவ்வருடத்தில் 370 கிலோ கொக்கெய்ன் – 1,415 கிலோ ஹெரோயின் மீட்பு – , 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!

இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் அதிகளவிலான சுற்றி வளைப்புக்களை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.
இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின்போது 26, 581 சந்தேகநபர்கள் கைதாகினர்.
இதன்போது, 10, 222 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த காலப்பகுதியில் 370 கிலோகிராமும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் – கல்வி அமைச்சர் ...
விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.....
|
|